Sinhala (Sri Lanka)English (United Kingdom)

கல்பிட்டி கரையோர சுற்றாடல் நிலையம்.

கல்பிட்டி கரையோர சுற்றாடல் நிலையம்.

கொழும்பிலிருந்து 150km தூரத்திலுள்ள இப்பகுதி நாட்டிலுள்ள மிக அழகிய கடற்கரைப்பகுதிகளில் ஒன்றாகும். பூகோள அடிப்படையில் கல்பிடி புத்தளம் கடனீரேரியை பிரிக்கும் குடாநாடாகும். இது டொல்பின்களின் சொர்க்கமாக கருதப்படுவதோடு மணற்பாங்கான கடற்கரை, சமதளமான கரையோர நிலப்பகுதி, கண்டற்தாவரங்கள், உவர் நீர் சதுப்பு நிலங்கள், மணற்குன்றுகள், எல்லைப்புற முருகைக் கற்பாறை, கடல் சார் சரணாலயம் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.

இயற்கைச் சூழலுடன்..............மகிழ்ந்து கொண்டாடுங்கள்...............
 • டச்சுக் குடாவிலுள்ள 14 தீவுகள். (பட்டலங்குண்டுவ/ பள்ளியாவத்த/ வேலை I, II, III/ உச்சமுனை/ இப்பன் தீவு/ பெரிய அரிச்சாலை/ சின்ன அரிச்சாலை/ எரமு தீவு/ சின்ன எரமு தீவு/ எரமு தீவு மேற்கு/ காக்கைத் தீவு/ முகத்துவாரம் (டச்சுக் குடா)
 • எல்லைப்புற முருகைக் கற்பாறை கடல் சார் சரணாலயம்
 • கடலாமைகளை அவதானித்தல்
 • மீன்பிடி
 • அலங்கார மீன் வகையினங்கள்
 • டொல்பின்களை அவதானித்தல்
 • கரையோர வாழிடங்கள்
 • பறவைகளை அவதானித்தல்
 • முக்குளித்தல் மற்றும் ஸ்நோர்களிங்
 • வன சுற்றுப்பயணங்கள் (வில்பத்து தேசிய பூங்கா)
 • பழைய டச் கோட்டையும் தேவாலயமும்
 • பரி. அன்னம்மாள் தேவாலயம் – தலவில
வசதிகள்:

தங்குமிடம்

இந்நிலையம் 04 மரத் தாழ்வாரமிடப்பட்ட குடும்பத்துக்கேற்ற குளியலறையுடன் கூடிய அறைகளைக் கொண்டது. இவ்வறைகள் சக்தியை சேமிக்கக் கூடிய வளிச் சீராக்கியைக் கொண்டது. உள்ளூர் அலைவரிசைகளைக் கொண்ட சாதாரண தொலைக்காட்சி, சகல வசதிகளுடன் கூடிய உணவுச்சாலை, கோப்பி மற்றும் தேனீர் தயாரிக்கும் உபகரணம் என்பவற்றையும் கொண்டது.

நிலையத்திற்குள்ளேயே உணவருந்துதல்

நிலைய உணவுச்சாலை

கருத்தரங்கு வசதிகள்

தனித்துவமான சூழல் மற்றும் குறிப்பிடத்தக்க விலையில் தரமான சேவைகள் மற்றும் வசதிகளைக் கொண்டிருப்பதன் விளைவாக கல்பிடிய சுற்றாடல் நிலையம் கருத்தரங்குகளையும் கூட்டிணை நிகழ்வுகளையும் நடத்துவதற்கான விருப்பத்துக்குரிய இடமாக மாறியுள்ளது.

பலதரப்பட்ட ஆசன வசதிகளுடன் கூடிய எமது கருத்தரங்கு மண்டபத்தை பல்வேறுபட்ட வைபவங்களுக்கு பயன்படுத்தலாம்.

 

வைபவம்

கொள்ளளவு

வகுப்பறை

100

"U" வடிவ ஆசன ஒழுங்குகள்

 

சதுர வடிவ ஆசன ஒழுங்குகள்

 

பதிவுகளுக்கு:

பிரிவு

(ஒரு நாளுக்கு)

விடுதி

ரூபா:

(A/C இன்றியவை)

மண்டபம்

ரூபா:

CCD Staff

 

 

Ministry of Fisheries & Aquatic Resource staff

 

 

Other Government/private Sector

 

 

Academic (School/University)

 

 

பொறுப்பதிகாரி: திரு. U. H. வன்னியாராச்சி
தபால் முகவரி: கல்பிடிய சுற்றாடல் நிலையம்,
குடாவ, கன்டகுளிய,
கல்பிடி, இலங்கை.
நேரில் விஜயம் செய்வதற்கான முகவரி: கல்பிடிய சுற்றாடல் நிலையம்,
குடாவ, கன்டகுளிய,
கல்பிடி, இலங்கை.
தொடர்பு இல: 071 4436293


 

 புதன்கிழமை, 27 பெப்ரவரி 2019 11:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது

எமது சேவைகள்


கடல் அரிப்பு

இயற்கை 

நீர் 

அறிவு

சட்ட ஒழுங்குகள் 

பொருளாதாரம் 

பொறியியல் 

அனர்த்தங்கள் 
 

முக்கிய தளங்கள்

கரையோர பிரதேசங்கள்

 
 

கரையோர நிலையங்கள்

முக்கிய தளங்கள்

எழுத்துரிமை © 2013 கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமை திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.
மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது
 
இறுதியாக : 22 ஆகஸ்ட் 2019