Accessibility Tools

 +94 11 24 49 754
+94 11 243 8005

கரையோர ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு பிரிவு


கரையோர கண்காணிப்பு, ஆராய்ச்சி, புலனாய்வு மற்றும் வடிவமைப்பு என்பவை கரையோர ஆராய்ச்சி மற்றும் வடிவமைப்பு பிரிவின் பணிகளாகும். சமூக, பொருளாதார மற்றும் சூழலியல் பிரச்சினைகளையும் போக்கையும் அடையாளம் காண்பதற்காக நாட்டின் கரையோர வலயம் ஆய்வுசெய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அடையாளம் கண்ட பிரச்சினைகளின் அடிப்படையில், ஆராய்ச்சியாளர்கள் அதற்கான தீர்வைக் கண்டறிவதற்கு செயலாற்றினர். அபிவிருத்தி கருத்திட்டங்களையும் கரையோர நிலைப்பாட்டையும் வடிவமைப்பதற்காக நீரியக்க விசை மற்றும் நிலப்பரிணாம அமைப்பியல் என்பவற்றின் பகுப்பாய்வுடன் கரையோர புலனாய்வு செயற்படுத்தப்பட்டது. மிகவும் யதார்த்தமான தீர்வுகளுக்காக பௌதிக ரீதியாக அல்லது எண்ணியல் ரீதியாக மிகவும் சக்திவாய்ந்த மற்றும் கூர் உணர்வுமிக்க கரையோர பிராந்தியங்கள் மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்டன. கரையோர அனர்த்தங்கள் அதிகரித்ததை அடுத்து, கரையோர இடர்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதுடன் தயார்நிலை, மாற்றி அமைத்தல் மற்றும் தணித்தல் ஆகிய நடவடிக்கைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. வான்வெளியியலுடனும் தற்காலிகமாகவும் விநியோகிக்கப்பட்ட கரையோர தரவுகள் மற்றும் தகவல்கள் என்பவற்றுடன் கரையோர தகவல் முறைமை தயாரிக்கப்பட்டு சிறந்த தீர்மானங்களை மேற்கொள்ளுவதற்காக கரையோர வலயத்தில் செயலூக்கத்துடன் செயலாற்றுகின்ற அரசாங்க மற்றும் தனியார் துறையைச் சேர்ந்தவர்களிடையே பகிர்ந்துகொள்ளப்பட்டது. நிகழ்கால தகவல்களுடன் கரையோர இணையத்தளம் விருத்திசெய்யப்பட்டு இற்றைப்படுத்தப்பட்டுள்ளது.

FaLang translation system by Faboba