கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத்தினால் வெளியிடப்படுகின்ற சிறு புத்தகங்களையும் சுவரொட்டிகளையும் பெற்றுக்கொள்ளுவது எப்படி?
சிறு புத்தகங்களும் சுவரொட்டிகளும் திணைக்கள நூலகத்தில் கிடைக்கின்றன.
கரையோர வலயங்களில் மேற்கொள்ளப்படுகின்ற அத்துமீறிய அபிவிருத்திகளைப் பற்றி யாருக்கு அறிவிப்பது?
கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்களுக்கு அல்லது திணைக்களத்தின் கரையோர வளங்கள் முகாமைத்துவ பிரிவிற்கு அறிவிக்கலாம்.
பவளப் பாறைகள் மற்றும் உயிர் பல்வகைமை பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளுவது எப்படி?
பவளப் பாறைகள் பற்றிய தகவல்களை திணைக்களத்தின் கரையோர வளங்கள் முகாமைத்துவ பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
கடல் ஆமைகளைப் பற்றிய தகவல்களைப் பெறுவது எப்படி?
கடல் ஆமைகள் பற்றிய தகவல்களை திணைக்களத்தின் கரையோர வளங்கள் முகாமைத்துவ பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
கண்டல் தாவரங்கள் பற்றிய தகவல்களைப் பெறுவது எப்படி?
கண்டல் தாவரங்கள் பற்றிய தகவல்களை திணைக்களத்தின் கரையோர வளங்கள் முகாமைத்துவ பிரிவிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
கடல் மணலை எடுத்துச் செல்லுவதற்கு / போக்குவரத்து செய்வதற்கு அனுமதி பெறுவது எப்படி?
எழுத்துமூல கோரிக்கையொன்றைச் சமர்ப்பித்து, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்திலிருந்து பொது வேலைகளுக்காக 02 கியூப் (ஆகக்கூடிய வரையறை மற்றும் கிடைக்கும் தன்மையைப் பொறுத்து) கடல் மணல் எடுப்பதற்கு அனுமதி பெற முடியும். கடல் மணலைப் போக்குவரத்து செய்வதற்கு புவிச்சரிதவியல் ஆய்வுகள் மற்றும் சுரங்கப் பணியகத்திலிருந்து (GSMB) அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.
கரையோர வலயத்தில் அபிவிருத்தி நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு அனுமதி பெறும் நடைமுறை யாது மற்றும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை?
இந்தப் பக்கத்தின் உள்ளடக்கம் விரைவில் வெளியிடப்படும்.
சுனாமி நிலைபற்றியும் அதன் பாதிப்புகள் பற்றியும் நாம் தகவல் பெற முடியுமா?
அதற்கான தகவல்களை காலநிலை அவதான திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
கடலரிப்பு நிலைபற்றி அறிவிக்க வேண்டிய அதிகாரி யார்?
- திணைக்கள தலைமை அலுவலகம் - பிரதான பொறியியலாளர் (கரையோரப் பணிகள்)
- திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்கள் - பிரதேசப் பொறியியலாளர்
கரையோர வலயத்தில் தடைசெய்யப்பட்ட எல்லை யாது?
இந்தப் பக்கத்தின் உள்ளடக்கம் விரைவில் வெளியிடப்படும்.
இலங்கை கரையோரத்தின் நீளம் எவ்வளவு?
ஏறக்குறைய 1680 கிலோமீட்டர்.
கரையோர வலயத்தின் எல்லை யாது?
இந்தப் பக்கத்தின் உள்ளடக்கம் விரைவில் வெளியிடப்படும்.
இந்த திணைக்களத்தின் பிரதேச அலுவலகங்கள் எங்கு அமைந்துள்ளன? அவற்றின் தலைவர்கள் யார்? பிரதேச அலுவலகங்களின் தொடர்பு விபரங்கள் யாவை?
வினவல் விபரங்கள் என்ற பட்டியலிலிருந்து தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த திணைக்களம் எந்த அமைச்சின் கீழ் உள்ளது?
மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழலியல் அமைச்சு.
திணைக்களத் தலைவரின் பெயரும் பதவியும் என்ன?
திரு. பீ.கே. பிரபாத் சந்திரகீர்த்தி
கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்
